சூப்பர் வேலை.. மாதசம்பளம் ரூ.35,400 முதல் ரூ1.77 லட்சம்.. அழைக்கும் தேசிய தகவல் மையம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் மையத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள 598 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1.77 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அதிகாப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தேசிய தகவல் மையம் உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இந்த பணியை பெற முடியும். இந்த பணி குறித்து முக்கிய தகவல்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தேசிய தகவல் மையத்தில் மொத்தம் 3 பிரிவுகளில் 598 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சயின்டிஸ்ட் - பி பணிக்கு 71 பேர், சயின்டிபிக் அலுவலர்/ என்ஜினீயர் பணிக்கு 196 பேர், சயின்டிபிக்/டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 331 பேர் என 598 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
சயின்டிஸ்ட் - பி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் என்ஜினீயரிங் அல்லது இளங்கலை தொழில்நுட்ப படிப்பு அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். சயின்டிபிக் அலுவலர்/ என்ஜினீயர் மற்றும் சயின்டிபிக்/டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு எம்எஸ்சி, எம்எஸ், எம்சிஏ, பிஇ, பிடெக் பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் நெட்வொர்க் செக்யூரிட்டி, சாப்ட்வேர் சிஸ்டர், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு -மாத சம்பளம் என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 33 வயதுக்குள்ளும், பிடபிள்யூடி பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். சயின்டிஸ்ட் - பி பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்மாக ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். சயின்டிபிக் அலுவலர்/ என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும், சயின்டிபிக்/டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.calicut.nielit.in/nic23/ இணையதளம் மூலம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications