மாதம் ரூ.37,000 டூ ரூ.77,000 சம்பளம்.. தேசிய விதை கழகத்தில் அசத்தலான வேலை.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
டெல்லி: மத்திய அரசின் தேசிய விதைகள் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர், மேனேஜ்மென்ட் டிரெய்னி, டிரெய்னி பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மாதம் ரூ.37 ஆயிரம் முதல் ரூ.77 ஆயிரம் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தேசிய விதை கழகம்(National Seeds Corporation limited) செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

மொத்தம் 3 பிரிவுகளில் 10 வகையான பதவிகளுக்கு வெவ்வேறு தகுதி படைத்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தேசிய விதை கழகத்தில் ஜூனியர் ஆபிசர் I(சட்டம்) பிரிவுக்கு 4 பேர், ஜூனியர் ஆபிசர் I (விஜிலென்ஸ்) பிரிவுக்கு 2 பேர், மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மார்க்கெட்டிங் பணிக்கு 15 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினியர் மற்றுமு் சிவில் என்ஜினியர் பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் டிரெய்னி என்ற பதவியில் விவசாய பிரிவுக்கு 40 பேர், மார்க்கெட்டிங் பிரிவுக்கு 6 பேர், குவாலிட்டி கன்ட்ரோல் பிரிவுக்கு 3 பேர், ஸ்டென்னோகிராபர் பணிக்கு 5 பேர், விவசாய ஸ்டோர்ஸ் பணிக்கு 12 பேர் என மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: ஜூனியர் ஆபிசர் I(சட்டம்), ஜூனியர் ஆபிசர் I (விஜிலென்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் டிரெய்னி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும், முன்னாள் படை வீரர்களுக்கு 5 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்பட உள்ளது.
கல்வி தகுதி: ஜூனியர் ஆபிசர் I சட்டப்பிரிவுக்கு சடட்ப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஜூனியர் ஆபிசர் I (விஜிலென்ஸ்) பணிக்கு டிகிரி முடித்து அரசு துறையில் விஜிலென்ஸ் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மார்க்கெட்டிங் பணிக்கு பிஎஸ்சி அக்ரிகல்சர் படிப்படன் எம்பிஏ அல்லது பிஎஸ்சி அக்ரிகல்சர் முடித்து டிகிரி, டிப்ளேமாவை மார்க்கெட்டிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
அதோடு மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் பணிக்குபிஇ, பிடெக்கில் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். மேலும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் சிவில் என்ஜினியர் பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் சிவில் என்ஜினியர் படிப்பை படித்திருக்க வேண்டும்.
டிரெய்னி பிரிவில் விவசாயம், மார்க்கெட்டிங், குவாலிட்டி கன்ட்ரோல், விவசாய ஸ்டோர்ஸ் பணிக்கு பிஎஸ்சி அக்ரிகல்சர் படிப்பையும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 12ம் வகுப்புடன் மற்றும் அதற்கு நிகரான டிப்ளமோ ஆபிஸ் மேனேஜ்மென்ட் படிப்பை ஸ்டெனோகிராபியுடன் முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: ஜூனியர் ஆபிசர் I(சட்டம்), ஜூனியர் ஆபிசர் I (விஜிலென்ஸ்) பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.37,224ம், அதிகபட்சமாக ரூ.77 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் டிரெய்னி பணிக்கு மாதம் ரூ.55,680 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: தகுதி மற்றுமு் விருப்பம் உள்ளவர்கள் www.indiaseeds.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டம். விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 25ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபாபர்ப்பு முறையில் பணியமர்த்தப்படுவார்கள். கம்ப்யூட்டர் வழி எழுத்து தேர்வு என்பது அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications