ரெடியா..மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்.. என்டிஆர்ஓவில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. என்ஜினியரிங், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ( National Technical Research Organization or NTRO) என்பது பிரதமர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இது தேசிய பாதுகாப்ப ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு வகையான தொழில்நுட்ப புலனாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Aviator II மற்றும் Technical Assistant பிரிவுகளில் மொத்தம் 182 பணிகள் காலியாக உள்ளன. Aviator II பணிக்கு 22 பேர், Technical Assistant (Computer Science and Information Technology) பிரிவில் பணிக்கு 81 பேர், Technical Assistant (Electronics and Communication)பணிக்கு 79 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி- வயது வரம்பு என்ன?
Aviator II பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், கணிதம், அப்ளைட் மேக்ஸ், இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். Technical Assistant பணிக்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் அல்லது எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் Aviator II பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள்ளும், Technical Assistant பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி Aviator II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. Technical Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 2023 ஜனவரி 21ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications