ரெடியா? மாதஊதியம் ரூ.60,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை.. அழைக்கும் என்டிபிசி.. சூப்பர் வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது.

மேலும் மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வரும் நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
என்டிபிசி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் அதன்படி எலக்ட்ரிக்கல் எரிக்சன்(Electrical Erection) பணிக்கு 12 பேர், மெக்கானிக்கல் எரிக்சன் (Mechanical Erection) பணிக்கு 30 பேர், சிவில் கன்ஸ்ட்ரக்சன் (Civil Construction) பணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி மற்றம் விருப்பம் உள்ளவர்கள் ntpc.co.in இணையதளம் மூலம் ஏப்ரல் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் பணிக்கான கல்வி தகுதி உள்பட கூடுதல் விபரங்கள் அறிய careers.ntpc.co.in எனும் இணையதளத்தில் வெளியாக உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications