மாதம் ரூ.55,000 சம்பளம்.. என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்? அசத்தலான வேலைக்கு அழைக்கும் என்டிபிசிஎல்
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசிஎல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 223 பேர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.55,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி என்டிபிசி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் ஆபரேஷன் (Assistant Executive - Operations) பணிக்கு 223 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ பிரிவில் எலக்டரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பவர்பிளான்ட்டில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.55 ஆயிரம் வரை வழங்கப்படும். கூடுதல் தங்குமிடம், இரவு பணிக்கான அலோவன்ஸ் மற்றும் பணி செய்வோரின் மனைவி, 2 குழந்தைகளுக்கான மெடிக்கல் வசதிகள் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிஇ, எக்எஸ்எம் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் ஸ்கிரீனிங் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும். அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு தேவையெனில் 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications