தேர்வு இல்லை.. மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்.. சென்னையிலேயே பணி.. அழைக்கும் என்எப்எஸ்யூ
டெல்லி: தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வெவ்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 6 முக்கிய நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.70 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்எப்எஸ்யூ (NFSU) எனும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University)செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக ரிப்போர்ட்டிங் ஆபிசர் (Reporting Officer) மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (Scientific Assistant ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ரிப்போர்ட்டிங் ஆபிசர் பணிக்கு 6 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் டெல்லி, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேற்கூறிய 16 பணியிடங்களில் ரிப்போர்ட்டிங் ஆபிசர் பிரிவில் சென்னையில் ஒரு காலியிடமும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் சென்னையில் 2 பணியிடமும் காலியாக உள்ளது.
ரிப்போர்ட்டிங் ஆபிசர் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் எம்டெக், எம்இ, எம்எஸ்சி, எம்சிஏ பிரிவுகளில் டிஜிட்டல் பாரின்சிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ரிப்போர்ட்டிங் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். இந்த 2 பதவிகளுக்கான வேலை என்பது தற்காலிகமானது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பயோடேட்டா மற்றும் உரிய ஆவணங்களை Campus Director, National Forensic Sciences University Gandhinagar என்ற முகவரிக்கு ஆன்லைனில் www.nfsu.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இது ஒரு தற்காலிக பணி என்பதால் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதலில் ஒரு ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தேவையை பொறுத்து 4 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications