மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசுசின் பொத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும், இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது. மத்திய அரசுசின் பொத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி உள்ளது. நவரத்தின அந்தஸ்தை பெற்ற இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது என்.எல்.சியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
* நோயியல் - 15
* கதிரியக்கவியல் - 10
* கன்வேயர் பெல்ட் வல்கனைசர் - 20
என மொத்தம் 45 பயிற்சி பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி:
மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் உயிரியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவை எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கன்வெயர் பெல்ட் வல்கனைசர் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 01.4.2007 க்கு முன்பாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை முதல் ஆண்டு ரூ.8,766-ம் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.10,019- ம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிபடையிலான பயிற்சி பணியிடங்கள் ஆகும். மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பிற விவரங்கள்:
OBC பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற OBC சான்றிதழ் (validity from 01-04-2025 to 31-03-2026) சமர்ப்பிக்க வேண்டும். (BC/MBCசான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது).
NLCIL ல் பயிற்சி முடித்த பின் நிரந்தர வேலை வாய்ப்பிற்கான உத்திரவாதம் ஏதும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
www.nlcindia.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 28.07.2025 காலை 10.00 மணி முதல் 14-08-2025 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ONLINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்திணை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.
கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 20-08-2025 மாலை 5.00 மணிக்குள் கீழ் கண்டமுகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலெக்ஷன் பாக்ஸ் என்ற பெட்டியில் சமர்பிக்க வேண்டும்.
முகவரி:
பொது மேலாளர் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என். எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் - 20,
நெய்வேலி - 607803.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://web.nlcindia.in/ldc_freshers_2025/download/MLT-CONVEYOR%20BELT%20VULCANISER-NET%20ADVERT-24-07-2025.pdf
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications