குரூப் 2 தேர்வு முறையில் மேஜர் மாற்றம்.. போட்டி தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதுபோக குரூப் 2 தேர்வு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகிறது. காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

புதிய அட்டவணை: தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் விதமாக வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது தேர்வு ஆணையம். அந்த வகையில் , 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்திருக்கிறது டிஎன்பிஎஸ்சி.
பணியிடங்கள் அதிகரிப்பு: அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்பு வெளியிட்டு இருந்த அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்வு அறிவிப்பு வெளியாகிறது.
இனி நேர்முகத்தேர்வு கிடையாது: இதுமட்டும் இன்றி தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான டெஸ்கிரிப்டிவ் முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
தேர்வு முறையில் மாற்றம்: அதேபோல், குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை 'ஆப்ஜெக்டிவ்' முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. திருத்தப்பட்ட அட்டவணையை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications