Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 58,000 சம்பளம்! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.58 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 6 பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

office-assistant-job-in-the-hindu-religious-endowments-department-monthly-salary-of-58-000

கல்வித் தகுதி:

* 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
* இந்து மதத்தை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பினை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 1.07.2024 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

அதன்படி ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிட, பழங்குடி வகுப்பினர், 37 வயது வரை விண்ணபிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தபடுத்தப்பட்டோர் 34 வயது வரை விண்ணபிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 1இன் படி மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணபிப்பது?

ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள http://hrce.tn.gov.in லிங்கில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, முழுமையாகக் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

"ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,
எண்.119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600 034"
என்ற முகவரிக்கு வரும் 28.05.2025 மாலை 05.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:

1. சான்றொப்பமிட்ட கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள்,
2. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள், கல்வியாளர்கள். மக்கள் பிரிதிநிதிகள் போன்ற எவரேனும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

3. நேர்முகத் தேர்வில் உண்மைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. தற்போது பணியிலிருந்தால் அந்நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று.
5. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் பதிவு எண் அடங்கிய சான்றின் நகல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+