வெளிநாட்டு வேலையில் சேர ஆசையா? தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சூப்பர் தகவல்
சென்னை: இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் நர்சுகளாக பணியாற்றுவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது. போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

எனவே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது .
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் டாக்டர், என்ஜினீயர், நர்ஸ், வீட்டு வேலைக்கு செல்லும் நபர்கள், மேஸ்திரி, திறன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வேலைவாய்ப்பு பெற முடியும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று டாக்டர், என்ஜினீயர், நர்ஸ், வீட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும். அடிக்கடி புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மகேஸ்வரன் நேற்று புதிய வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது: "இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து நர்சு பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. மேலும், அந்த நாடுகளுக்கு நர்சு பணிக்கு செல்வதற்கு அந்தந்த நாட்டிற்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பணிக்கான நேர்காணலுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இதனை கருத்தில் கொண்டு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு நர்சு பணிக்கு செல்ல விருப்பமும், ஆர்வமும் உள்ள நர்சுகள் மற்றும் நர்சிங் படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு தேர்வுக்கான பயிற்சியினை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள நர்சுகள் மற்றும் நர்சிங் படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் தங்களின் சுயவிவர விண்னப்பத்தினை அயல்நாட்டு வாலைவாய்ப்பு நிறுவனத்தின் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை www.omcmanpower.tn.gov.in மற்றும் OMCL Mobile App வாயிலாக அறிந்துகொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications