டிகிரி போதும்.. மாதம் ரூ.25,000 டூ ரூ.1.17 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் பிஜிசிஐஎல் நிறுவனம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஜிசிஐஎல்-ல் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும்போது மாதம் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 வரை சம்பளம் பெற முடியும்.
மத்திய மின் துறைஅமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limited or PGCIL) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்தியாவின் மின்வினியோகத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் தான் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்களின் விபரம்: பிஜிசிஐஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்ஆர்) பணிக்கு மொத்தம் 39 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஒரு பணியிடம் என்பது Backlog ஆகும் என பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 05.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிபிஏ, பிபிஎம், பிபிஎஸ் அல்லது அதற்கு நிகரான ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு கூடுதல் கல்வி தகுதியை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதாவது மேற்கூறிய படிப்பில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 5ம் தேதிக்குள் powergridindia.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, Computer Based தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications