தேர்வு இல்லை.. இன்டர்வியூ மட்டும் தான்.. மத்திய மின்சாரத்துறையில் 435 காலியிடங்கள்.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் தேர்வு இன்றி இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு 463 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய மின்சாரத்துறையின் கட்டுப்பாட்டில் பிஜிசிஐஎல் எனும் பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (PGCIL or Power Grid Corporation of India Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் மாநிலங்களுக்கு மின்சாரங்களை பகிர்ந்து வழங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் என்பது ஹரியானா மாநிலம் குர்க்கிராமில் அமைந்துள்ளது.

மேலும் பல இடங்களில் பிஜிசிஐஎல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பிஜிசிஐஎல் நிறுவனத்தில் தற்போது இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு மொத்தம் 4 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்ஜினியர் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு 331 பேர், இன்ஜினியர் டிரெய்னி (சிவில்) பிரிவுக்கு 52பேர், இன்ஜினியர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவுக்கு 14 பேர், என்ஜினீயர் டிரெய்னி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவுக்கு 37 பேர் என மொத்தம் 463 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு - மாத சம்பளம்: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றி எந்த தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட கடந்த ஆண்டு இந்த பணிக்கு தேர்வானவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பார்த்தால் அதேசம்பளம் அல்லது கூடுதல் சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
கல்வி தகுதி: இன்ஜினியர் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் (பவர்), எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், பவர் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்ஜினியர் டிரெய்னி (சிவில்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இன்ஜினியர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். என்ஜினீயர் டிரெய்னி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜுலை 4ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, ஸெ்டி, பிடபிள்யூபிடி, எக்ஸ் எஸ்எம் மற்றும் இந்த துறையில் பணியாற்றுவோருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
பணிக்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 2024ம் ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here












Click it and Unblock the Notifications