சொன்னபடி செய்த ஸ்டாலின்.. பொங்கலுக்கு ஸ்பெஷல் போனஸ் அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னாள் கிராம் அலுவலகங்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க 183.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சி.டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு பொங்கல் போனஸ் வழங்கப்படும்.
முன்னாள் ஊழியர்கள், முன்னாள் கிராம் அலுவலர்களுக்கு ரூ.1000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். இந்த பொங்கல் போனஸ் அறிவிப்பால் 9.90 லட்சம் ஊழியர்கள் பயன் அடைவார்கள். பழைய ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனைகளை செய்து வரும் நிலையில்தான் இந்த போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும், பழைய ஓய்வூதியம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தலைவருமான இவர் ஸ்டாலினிடம் பழைய ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம், அதன் பலன்கள், வேறுபாடுகள், சிக்கல்கள், மீண்டும் பழைய ஓய்வூதியம் வந்தால் என்ன செய்வது, அதன் சிக்கல்கள் என்னென்ன என்று விளக்கங்களை அடங்கிய ரிப்போர்ட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளாராம்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மூலமும், கோரிக்கை மனுக்கள் வாயிலாகவும் தங்கள் நிலைப்பாட்டை அரசுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
Old Pension Scheme
அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இதில் ஒரு முக்கிய முடிவு எட்டப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஓய்வுக்குப் பின் ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
தமிழக அரசின் திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம்
ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. NPS என்பது சந்தை அடிப்படையிலான பங்களிப்புத் திட்டமாகும், இதில் ஓய்வூதியம் முதலீடுகளின் சந்தை செயல்பாட்டைப் பொறுத்தது. சமீபத்தில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில், 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், இது பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications