Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக காவல்துறையில் எஸ்.ஐ தேர்வு இந்த மாதம் கிடையாது! திடீரென வெளியான அறிவிப்பு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 பணியிடங்களுக்காக வரும் ஜூன் 28, 29 ஆம் தேதி நடைபெற இருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி உன உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பு தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. விளக்கங்கள் வரும் வரை ஜூன் 28, 29 -ல் திட்டமிடப்பட்டு இருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 909 ஆண்கள், 390 பெண்கள் என 1,299 எஸ்.ஐ பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டது. 1,299 எஸ் ஐ காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

job police job TNUSRB

1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்

தமிழக காவல்துறை பணிக்காக ஆட்சேர்ப்பு பணியை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொள்கிறது. போலீஸ் வேலை கனவுடன் இருக்கும் தேர்வர்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிடும் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழக காவல்துறையில் எஸ் ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு அண்மையில் வெளியானது.

1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 53 இடங்கள் எஸ்.சி.(ஆதித் திராவிடர்கள்), எஸ்.டி (பழங்குடியினர்) வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆகும். ஆண், பெண் மற்றும் 3-ம் பாலித்தனத்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். பி.சி., பி.சி-முஸ்லிம், எம்.பி.சி. வகுப்பினருக்கு 32, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் 3-ம் பாலினத்தவருக்கு 35, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உடற்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதம் (ஆண்களுக்கு 7 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம்) ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 28, 29 -ல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது தேர்வு நடைபெறும்?

தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதனால், தீர்ப்பு தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் வரும் வரை எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ தேர்வுக்காக ஆர்வத்துடன் தயாராகி வந்த இளைஞர்களுக்கு சற்று ஏமாற்றத்தை இந்த அறிவிப்பு கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+