8வது படித்திருந்தாலே வேலை ரெடி.. பெரம்பலூரில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

8ம் வகுப்பு முதல் ஐடிஐ, நர்சிங், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை(பிப்.1) நடைபெற உள்ளது.

Private employment camp in Perambalur tomorrow

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 8-ம் வகுப்பு முதல் பட்ட படிப்புவரை படித்தவர்கள், தொழிற்கல்வி பயின்றவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.

மேலும், தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நர்சிங், டர்னர், பிட்டர், மெசினிஸ்ட், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் திறமை உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் சான்றிதழ்களுடன் நாளை(பிப்.1) காலை 8 மணி முதல் 3 மணி வரை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+