நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை முக்கியமான நாள்.. ஊட்டியில் மிஸ் பண்ணிடாதீங்க
ஊட்டி: நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) உதகையில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என பலருக்கும் அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது. இது எப்படி என்றால் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இதில் நேரடியாக இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற முடியும். இப்படி அரசு ஏற்பாடு செய்யும் வேலைவாய்ப்பு முகாம்களில் பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என பலருக்கும் நல்ல நிறுவனங்களில் வேலையும் கிடைக்கும்.
அந்த வகையில் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது, இந்த மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உதகையில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதன்படி வேலை தேடுபவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications