சிவகங்கை, விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க.. அரசு அறிவிப்பு
சிவகங்கை: ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுபவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் கூறியுள்ளார்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறுதிட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை வேலைவாய்ப்பு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள அறிவிப்பில் கூறுகையில், "ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகம்
அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுபவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை
இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்பு
எனவே, விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே வேலைதேடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விருதுநகரில் வேலைவாய்ப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 10.01.2025 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரை, விருதுநகர் வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
500 காலி பணியிடங்கள்
விருதுநகரில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கூடுதலாக, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் வழங்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க என்ன தகுதி
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கலந்துகொள்ளலாம். மேலும், ஐடிஐ முடித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், நர்சிங், பார்மசி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என பலர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகள் பெற 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் நேரில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டத்திலும் நடைபெறுகிறது. முழு விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கேட்டு அறியலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications