டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்.. சென்னையிலேயே ஐடி வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்
சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபரல நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணி முன்அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தில் ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ப்ரோபல் (Propel). இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ப்ரோபல் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு:
சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். என்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் துறையில் ஏதேனும் ஒரு படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். 2023, 2024ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இதன் மூலம் பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
ப்ரோகிராமிங் லேங்குவேஜின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அதோடு c, c++, Java, C#, Pythone, JavaScript உள்ளிட்ட ஏதேனும் ஒரு ப்ரோகிராமிங் லேங்குவேஜை நன்கு கற்று தெரிந்திருக்க வேண்டும். டேட்டா பேசஸ், டேட்டா ஸ்ட்ரெக்சர், ஓஓபிஎஸ் உள்ளிட்டவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் Aptitude Test அதன்பிறகு Programming Test நடத்தப்படும்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து நேர்க்காணல் என்பது நடத்தப்படும். இப்படி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் 6 மாத காலம் என்பது பயிற்சி காலமாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யவது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications