Railway job: ரயில்வேயில் கொட்டி கிடக்கும் வேலை! இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. டிகிரி தகுதி தான்! தூள் கிளப்புங்க
சென்னை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரயில்வே என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் போன்ற பதவிகளில் மொத்தம் 5,800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. கைநிறைய சம்பளம், பணி பாதுகாப்பு, பிற சலுகைகள் உள்ளிட்டவைகள் இருப்பதால் ரயில்வே வேலைக்கு சேர்ந்தாலே போதும் என்ற ஆசையுடன் தேர்வர்கள் ஆண்டுக்கணக்கில் படித்து வருவதை பார்க்க முடியும்.

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பி நிரப்பி வருகிறது. தற்போது தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரயில்வே என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
Chief கமர்ஷியல் - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் - தட்டச்சர் & போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,800 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
அனைத்து பணியிடங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முடிந்தவர்களும் 33 வயதுக்கு உட்பட்டவர்களுமாக இருத்தல் அவசியம். 20.11.2025 தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* சீஃப் கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - ரூ.35,400/-
* ஸ்டேஷன் மாஸ்டர் - ரூ.35,400/-
* சரக்கு ரயில் மேலாளர் - ரூ.29,200/-
* ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட் - தட்டச்சர் - ரூ.29,200/-
* சீனியர் கிளர்க் - தட்டச்சர் - ரூ.29,200/-
* போக்குவரத்து உதவியாளர் - ரூ.25,500/-
அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து புரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.10.2025
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2025 at 11.59 PM
ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications