ரிசர்வ் வங்கியில் கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்கள்.. மிகப்பெரிய குட்நியூஸ்.. விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) 94 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? தேர்வு முறை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் .
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கிரேடு 'பி' (டிஆர்)- பொது அதிகாரிகள் (66 பணியிடங்கள்) , கிரேடு 'பி' (டிஆர்) - பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை அதிகாரிகள் (21). கிரேடு 'பி' (டிஆர்) புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறை (7 பணியிடங்கள்) ஆகிய வேலைகளுக்கு ஆன்லைன் முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 94 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று (ஜூலை 25) முதல் ஆகஸ்ட் 16 வரை (மாலை 6.00 மணி வரை) அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in இல் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி மொத்த காலி பணியிடங்கள்: 94
கிரேடு 'பி' (டிஆர்)- பொது அதிகாரிகள் : 66 பணியிடங்கள்
கிரேடு 'பி' (டிஆர்) - பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை அதிகாரிகள்: 21 பணியிடங்கள்
கிரேடு 'பி' (டிஆர்) புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறை m அதிகாரிகள் : 7 பணியிடங்கள்
வயது வரம்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 21 வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் ஜூலை 1, 2024 அன்று 30 வயதை எட்டியிருக்கக்கூடாது. அரசின் அறிவிப்பின் படி வயது தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: கிரேடு பி-ஜெனரலுக்கான குறைந்தபட்ச தகுதி குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதே சமயம் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை அதிகாரி மற்றும் புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறை அதிகாரி பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் GEN/OBC/EWS களுக்கு ரூ.850 மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100.
RBI கிரேடு B அதிகாரி 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு போக வேண்டும். அங்கு காலியிடங்களுக்குச் சென்று கிரேடு பிக்கான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தேர்வு முறை எப்படி
முதல் கட்ட தேர்வு
இரண்டாம் கட்ட தேர்வு
நேர்காணலுக்கு பின் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்
முதற்கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : செப்டம்பர் 8, 2024
புள்ளியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை, பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி துறை: செப்டம்பர் 14, 2024
இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 19. 2024
இதர இரு பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு அக்டோபர் 26ம் தேதி நடைபெறும்
தேர்வுக்கு விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் ஜூலை 25, 2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2024












Click it and Unblock the Notifications