கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 108 ஆம்புலன்சுகளுக்கு ஆட்கள் தேர்வு.. நல்ல சம்பளம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்சுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் சேவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கும், மருத்துவ உதவியாளர் வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16790/- (மொத்த ஊதியம்) ஆக இருக்கும். நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு B.Sc நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) Life Science Graduates (B.Sc Zoology, Botony, Bio-Chemisty, Micro-biology, Bio Technology) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 16990 ரூபாய் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும் (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்).
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்சுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.
பணி நேரம் 12 மணி நேர 'ஷிப்ட்' முறையில் இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, விதிகளுக்கான தேர்வு, சோதனை ஓட்டம் ஆகிய முறைகளில் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7397724841, 7397724822, 7397724825, 7397724853, 7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications