மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் வேலை.. தமிழ்நாட்டிலும் காலிப்பணியிடங்கள்.. அப்ளை பண்ண ரெடியா
சென்னை: மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள 203 ஜூனியர் டெக்னிஷியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னிஷியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. தென் மாநிலங்களை பொறுத்தவரை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் சில பகுதிகள் (SR-II) ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: இதற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து எலக்ட்ரிஷியன் கிரேடில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். பி இ/ பிடெக், டிப்ளமோ ஆகிய உயர் படிப்புகள் படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. இது குறித்த தெளிவான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதார்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பள விவரம்: ஒரு ஆண்டு பயிற்சி காலம் வரை ரூ.25,500 வரை கிடைக்கும். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு ரூ. 74 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சர்வீஸ் பாண்ட் போடப்படும். இது குறித்த விவரங்கள் தேர்வு அறிவிப்பில் உள்ளது.
தேர்வு நடைபெறும் இடங்கள்: இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தென் மாநிலங்களை பொறுத்தவரை ஐதராபாத், விஜயவாடா, விசாகப்படினம், பெங்களூர், சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 12.12.2023 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.powergrid.in/job-opportunities என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications