அசத்தலான வாய்ப்பு.. மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம்! மதுரை டிஆர்டிஏ-வில் சூப்பர் வேலை
மதுரை: மதுரை டிஆர்டிஏ-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் டிஆர்டிஏ எனும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் துறை செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும், மேற்பார்வையிடுவது இதன் முக்கிய பணியாகும். அதோடு மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதும் இந்த முகமையின் பணியாக தான் இருக்கிறது.

இந்நிலையில் தான் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டிஆர்டிஏ-வில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக முழுவிபரம் வருமாறு:
மதுரை டிஆர்டிஏ-வில் தற்போது இன்பர்மேஷன், கல்வி, தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா, சோசியல் மொபைலிேஷசன், பப்ளிக் செக்டார் கம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பட்ட மேற்படிப்டை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பவளளம் வழங்கப்படும்.
மேலும் ‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட்' மற்றும் ‛சானிடேசன் பிரிவுக்கு எக்ஸ்பர்ட்' பணிக்கு 2 பேரும், ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட்' பணிக்கு ஒருவரும், திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (
Planning convergence and monitoring) பிரிவில் எக்ஸ்பர்ட் பணிக்கு ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் ‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட் மற்றும் சானிடேசன்' மற்றும் ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' எக்ஸ்பர்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ படிப்பை சுற்றுசூழலியல் மற்றும் சிவில் பிரிவில் முடித்திருந்து ஒன்று அல்லது 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான எக்ஸ்பர்ட் பணிக்கு பிடெக், எம்பிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட் மற்றும் சானிடேசன்' மற்றும் ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' எக்ஸ்பர்ட், திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான எக்ஸ்பர்ட் பணிக்கு தலா ரூ.35 ஆயிரம் சம்பவளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அனைவரும் அவுட் சோர்சிங் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்த The Project Director, District Rural Development Agency, Collectorate, Madurai - 625 020' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகம் ஏதேனும் இருப்பின் வேலை நேரத்தில் 74026 07999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications