வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. அழைக்கும் Amazon ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அமேசானின் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் செயல்படும் அமேசான் நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அமேசான்.. பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வரும் உலகளாவிய நிறுவனமாக வளர்ந்து உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

it jobs jobs job

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்தின் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளது. சென்னையிலும் அமேசான் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் எச்ஆர் அட்மினிஸ்ட்ரேட்டர் (HR Administrator - Time & PaySVC)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில தகுதிகள் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மேலும் 6 மாதம் முதல் 1 ஆண்டு அல்லது அதற்கும் அதிகமாக எச்ஆர் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை மைக்ரோசாப்ட் ஆபிஸ் புராடெக்ட்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக கஸ்டமர் சர்வீஸ் அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த பணி என்பது ஒப்பந்த அடிப்படையிலானது. தற்போது வேலைக்கு தேர்வாகும் நபர்கள் 6 மாதங்கள் வரை பணியமர்த்தப்படுவர்கள். இவர்கள் Remote முறையில் பணியாற்றலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து பணியை பெறலாம். இந்த பணிக்கான விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+