RRB Job: உதவி லோகோ பைலட் வேலை.. 9,970 பணியிடங்கள்! அப்ளை பண்ணவங்களுக்கு ரயில்வே கொடுத்த அப்டேட்! செக் பண்ணுங்க
சென்னை: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 9,970 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்கள். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

லோகோ பைலட் பணியிடங்கள்
ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படுகிறது. ரயில்வே தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான தேர்வர்கள் நாடு முழுவதும் படித்து வருகிறார்கள். ரயில்வேயை பொறுத்தவரை காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்பொது அறிவிப்புகள் வெளியிட்டு பணியிடங்களை நிரப்பும்.
அந்த வகையில், உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மொத்தம், 9,970 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
தெற்கு ரயில்வே பணியிடங்கள்
மத்திய ரயில்வே - 376
கிழக்கு ரயில்வே - 868
தெற்கு ரயில்வே - 510
மேற்கு ரயில்வே - 885
தென் கிழக்கு ரயில்வே - 921
வடக்கு ரயில்வே - 521
என அனைத்து மண்டலங்களையும் சேர்த்து, 9,970 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
கல்வித் தகுதி
இதற்கு எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியுடன் துறைசார்ந்த பிரிவில் ஐடிஐ, 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா?
இந்த தேர்வுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ரயில்வே நேற்று (டிச.05) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி சரிபார்ப்பது?
தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறத தேதியை ஆர்.ஆர்.பி இணையதளத்தில் rrbapply.gov.in. உள்ளீடு செய்து தங்கள் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக, விண்ணப்பதாரரக்ளுக்கு அவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே முதல் கட்ட கணினி வழியிலான (சிபிடி) ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications