ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை.. 3039 பணியிடங்கள்! 10 ஆம் வகுப்பு தகுதி போதும்! தேதி முடிய போகுது
சென்னை: ரயில்வேயில் 3039 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருவாரமே அவகாசம் உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இதுவரை விண்ணப்பிக்காவிட்டாலும் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) நடத்தி வருகிறது. ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பபடும். வழக்கமான பணியிடங்களை தவிர அப்ரண்டிஸ் (பயிற்சி) பணியிடங்களும் நிரப்பபட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது வடக்கு ரயில்வேயில் 3093 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, சம்பளம் எவ்வளவு, விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
வயது வரம்பு: அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15-வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒப்பந்தம் மற்றும் ஊதியம் ஆகியவை நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 11.01.2024 ஆகும். கிட்டதட்ட ஒருவாரமே எஞ்சியிருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications