கைநிறைய சம்பளம்.. சேலத்திலேயே மத்திய அரசு பணி..ஐடிஐ முடித்தவர்கள் முதல் டாக்டர் வரை விண்ணப்பிக்கலாம்
சேலம்: சேலத்தில் உள்ள மத்திய அரசின் சேலம் இரும்பு ஆலையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. கைநிறைய சம்பளத்துடன் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்கள் முதல் டாக்டர் படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை அடிவாரத்தில் சேலம் இரும்பு ஆலை (Salem Steel Plant OR SSP) அமைந்துள்ளது. இந்த ஆலை மத்திய அரசின் இரும்பு மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இங்கு துருப்பிடிக்காத இரும்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சேலம் இரும்பு ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

259 காலியிடங்கள்
சேலம் இரும்பு ஆலையில் மொத்தம் 259 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் மொத்தம் 24 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. சீனியர் ஆலோசகர் (இருதயவியல்) ஒருவர், மூத்த ஆலோசகர் (நரம்பியல் அறுவை சிகிச்சை) ஒருவர், எலும்பியல் பொது அறுவை சிகிச்சை ஆலோசகர் மனநல மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பிரிவில் 8 பேர், மூத்த மருத்து அதிகாரி 5, மேலாளர் (ஹைட்ராலிக்ஸ் - பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள்) பிரிவில் 2, மேலாளர் (மெக்கானிக்கல் - பவர் இன்ஜினியரிங் பராமரிப்பு) பிரிவில் 2, மேலாளர் (மெக்கானிக்கல் - பார் & ராட் மில்), மேலாளர் (எலக்ட்ரிக்கல் - பார் & ராட் மில்), துணை மேலாளர் (சுரங்கம்), துணை மேலாளர் (புவியியல்) உள்ளிட்வற்றுக்கு தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன.

சர்வேயர்-உதவி மேலாளர்
மேலும் உதவியாளர் மேலாளர் பிரிவில் 12 பேர், உதவி மேலாளர் (பாதுகாப்பு) பிரிவில் 10 பேர், மைன்ஸ் போர்மேன் பிரிவில் 16 பேர், சர்வேயர் பிரிவில் 4 பேர், ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர்) பிரிவில் 8 பேர், மைனிங் மேட் பிரிவில் 17 பேர், பிளாஸ்டர் பிரிவில் 17 பேர், ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (கொதிகலன் செயல்பாடு) பிரிவில் 43 பேர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (கொதிகலன் செயல்பாடு) பிரிவில் 23 பேர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பயிற்சி)பிரிவில் 24 பேர் உள்பட மொத்தம் 24 பிரிவுகளில் 259 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தனித்தனியே கல்வி தகுதிகள் உள்ளன. மருத்துவர்கள் சார்ந்த பணிகளுக்கு அதுசார்ந்த மருத்துவ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலாளர், உதவி மேலாளர், பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பிஇ/பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிற பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டியது அவசியமாகும்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் குறைந்தபட்ச வயதானது 28 ஆகவும், அதிகபட்ச வயது என்பது 41 ஆகவும் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வித்தியாசம் என்பது மாறுபடும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை உள்பட பிற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது உண்டு.

மாத சம்பளம் எவ்வளவு?
டாக்டர் மற்றும் மேலாளர் பணியிடங்களைபொறுத்தமட்டில் குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும். மெடிக்கல் ஆபிசர், உதவி மேலாளர் பணிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரையும், பிற பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.25,070 முதல் ரூ.38,920 வரையும் சம்பளமாக கிடைக்கும்.

தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பம் செய்பவர்கள் கம்ப்யூட்டர் வழியிலான தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 முதல் ரூ.700 வரை பொறுப்புகளை பொறுத்து மாறுபடுகிறது. எஸ்சி, எஸ்சி, பிடிபிள்யூபிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.100ல் இருந்து ரூ.200க்குள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://sail.co.in/ இணையதளம் சென்று Career என்ற ஆப்சனை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 17 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். சேலம் இரும்பு ஆலைக்கு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தேவையெனில் அது சார்ந்த பிற இடங்களில் உள்ள ஆலைகளிலும் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications