எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. கை நிறைய சம்பளம்! செம சான்ஸ்! தேதி முடிய போகுது! விட்றாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கு மொத்தம் 42 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும்? கல்வித்தகுதி என்ன? என்பன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* மேலாளர் (டேட்டா சயின்டிஸ்ட்) - 13 பணியிடங்கள்
* துணை மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) - 29 பணியிடங்கள் என மொத்தம் 42 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பி.இ / பி.டெக், எம்.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி போன்ற கல்வித்தகுதி உடையவராக இருக்க வேண்டும். டேட்டா சயின்ஸ் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். ஏ.ஐ / எம்.எல் மாடல் டெவலப்மண்ட் பிரிவிலும் அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
* மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) பணிக்கு 26 முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* துணை மேலாளர் (டேடா சயிண்டிஸ்ட்) பணிக்கு 24-வயது முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
* மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) - ரூ.85,920- 1,05,280
* துணை மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) கிரேடு ஸ்கேல் 2 - ரூ.64,820- 93,960
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு வெற்றி பெறும் தேர்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். அதாவது வரும் 24 ஆம் தேதி (24.02.2025) தான் கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://sbi.co.in/documents/77530/43947057/31012025_FINAL+ADVERTISEMENT_ADV_CRPD_SCO_2024-25_27.pdf/2874a4d9-82d1-4bda-8742-f389c773b304?t=1738327256428 செய்யவும்.
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications