எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 93,000 சம்பளம்! டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்! தட்டி தூக்குங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை மேலாளர், உதவி மேலாளர் பதவி உள்பட மொத்தம் 1,511 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. ரூ.93,000 சம்பளம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
துணை மேலாளர் (Systems) - ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி - 187 பணியிடங்கள்
துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) - இன்ஃப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ் - 412
துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) - நெட்வொர்க்கிங் ஆபரேஷன்ஸ் - 80
துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) - IT ஆர்கிடெக் - 27
துணை மேலாளர் (அமைப்புகள்) - தகவல் பாதுகாப்பு - 07
உதவி மேலாளர் (சிஸ்டம்) - 784
உதவி மேலாளர் (சிஸ்டம்) (Backlog Vacancies) - 14
கல்வி தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பிடெக்/பிஇ -கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். இதே பாடப்பிரிவில் எம்.டெக்/எம்.எஸ்.சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?:
1. துணை மேலாளர் (Systems) - ரூ.64,820 - 93,960/-
2. உதவி மேலாளர் (சிஸ்டம்) - ரூ.48,480 - 85,920/-
வயது வரம்பு: துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21-ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அரசு விதிமுறைகள் படி வயது உச்ச வரம்பில் இரு பணியிடங்களுக்கும் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் முறையில் எழுத்து தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு விண்னப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: தேர்வு மையங்களை பொறுத்தவரை நாட்டில் உள்ள பெருநகரங்களில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். புதுவையிலும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 04.10.2024 கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications