மாதஊதியம் ரூ.44,500 டூ ரூ.89,150.. ‛செபி’யில் உதவி மேலாளர் பதவி! சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
டெல்லி: மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் செபி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு சட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்திய பங்கு சந்தைகள், நிதி சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாக செபி எனும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI or Securities and Exchange Board of India) இயங்கி வருகிறது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

செபி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆபிசர் கிரேடு ஏ (உதவி மேலாளர்) பணிக்கு மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சட்டப்படிப்பு, எல்எல்பி படிப்பை முடித்திருக்க வேண்டும் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி, ஓய்வு சர்வீஸ்மேன்களுக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி (பொது) பிரிவினருக்கு 10 வயது வரையும், பிடபிள்யூடி (ஓபிசி) பிரிவினருக்கு 13 வயது வரையும், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 31.05.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.44,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக என்றால் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.100 ஆக உள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 9ம் தேதிக்குள் sebi.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்போர் ஆன்லைன் தேர்வு (பேஸ் I, II), நேர்க்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications