தினமும் 800 ரூபாய் உதவித்தொகை.. தமிழக அரசே வழங்கும் பயிற்சி.. 100 சதவீதம் வேலை வாய்ப்பு உறுதி
கோவை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளிகளுக்கு 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளிகளுக்கு 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் தொடங்கப்பட உள்ளது.

இதில் 3 மாத காலப் பயிற்சியில், முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தையூரில் அமைந்துள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத கால பயிற்சி நாவலூா் எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. வரை படித்திருக்கலாம்.
வயது 18 முதல் 20 வரை இருத்தல் வேண்டும். இதில், கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிறுவனத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்:
7 நாள்கள் வழங்கப்படும் இப்பயிற்சி, தையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறுபவா்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். 3 ஆண்டுகள் தொடா் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளா்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும். இதில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தகுதியான, விருப்பமுள்ள தொழிலாளா்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications