2.40 லட்சம் காலியிடம்! ரூ.43,000 வரை ஊதியம்.. எஸ்எஸ்ஏவில் ஆசிரியர் முதல் பியூன் வரை! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் ஆசிரியர், லேப் டெக்னீசியன், பியூன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 61 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.22,700 முதல் அதிகபட்சமாக ரூ.43,300 வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க பிப்ரவரி 25ம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கல்வி திட்டங்களில் ஒன்று சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan). அதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம். இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 வயது முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கம் கட்டாய கல்வி வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில் தான் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் 2.40 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 2 லட்சத்த 40 ஆயிரத்து 61 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் தொடக்க ஆசிரியர் (Primary Teacher) பணிக்கு 98,305 பேர், லேப் டெக்னீசியன் பணிக்கு 18,650 பேர், பியூன் (Peon) பணிக்க 24,300 பேர், கார்யாலயா ஸ்டாப் (Karyalaya Staff) பணிக்கு 25,964 பேர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு 72,842 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: தொடக்க ஆசிரியர், லேப் டெக்னீசியன் பணிகளுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கார்யாலயா ஸ்டாப் பணிக்கு 42 வயதுக்குள்ளும், கம்யூட்டர் ஆசிரியர் மற்றும் பியூன் பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். தொடக்க ஆசிரியர் பணிக்கு டிகிரி, லேப் டெக்னீசியன் பணிக்கு, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பியூன் பணிக்கு 8 ம் வகுப்பும், கார்யாலயா பணிக்கு 10, 12ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூ.22,700 வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.43,300 வரை வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.43,300 சம்பளம் வழங்கப்படும். லேப் டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.39,500, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ரூ.37,700, கார்யாலயா ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.33,500, பியூன் பணிக்கு ரூ.22,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தொடக்க ஆசிரியர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
தொடக்க ஆசிரியர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
லேப் டெக்னீசியன் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
லேப் டெக்னீசியன் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
பியூன் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பியூன் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
கார்யாலயா ஸ்டாப் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
கார்யாலயா ஸ்டாப் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications