மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்!
சென்னை: மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்றான சசிர சீமா பல் 827 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஓட்டுநர், கால்நடை, தோட்டக்காரர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
சசிர சீமா பல் (SSB) என்பது நாட்டின் மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்றாகும். இது இந்தியா நேபாளம் மற்றும் இந்தியா - பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுகிறது. கடந்த 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படை, எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் அவசர காலங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் இதில் 827 கான்ஸ்டபிள் (ஓட்டுநர், கால்நடை, தோட்டக்காரர், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர், தையல்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தச்சர், நர்சிங் உதவியாளர்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களின் விவரங்கள்:
ஓட்டுநர் (ஆண்களுக்கு மட்டும்) - 553,
கால்நடை - 34,
தோட்டக்காரர் - 41,
தண்ணீர் கொண்டு செல்பவர் - 05,
செருப்பு தைப்பவர் - 25,
தையல்காரர் - 41,
சலவையாளர் - 74,
முடிதிருத்துபவர் - 43,
சர்வார் - 03,
தச்சர் - 07,
நர்சிங் உதவியாளர் - 01
கல்வித் தகுதி, அனுபவம்:
* கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கால்நடை கான்ஸ்டபிள் பதவிக்கு அறிவியல் ஒரு பாடமாகவும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையில் ஒரு வருட அனுபவம் தேவை.
* ஓட்டுநர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HMV) கட்டாயம். இந்தப் பணி ஆண்களுக்கு மட்டுமே.
* தோட்டக்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர் மற்றும் தையல்காரர் போன்ற கான்ஸ்டபிள் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் அல்லது 1 வருட ITI சான்றிதழ் + 1 வருட அனுபவம் அல்லது ITI-யில் 2 வருட டிப்ளோமா அவசியம். இவர்கள் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
* தச்சர் கான்ஸ்டபிள் பணிக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் அல்லது 1 வருட ITI சான்றிதழுடன் 1 வருட அனுபவம், அல்லது ITI-யில் 2 வருட டிப்ளோமா தேவை.
* நர்சிங் உதவியாளர் பதவிக்கு அறிவியல் பாடத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் அல்லது ரெட் கிராஸ் சொசைட்டியின் முதல் உதவி சான்றிதழ் மற்றும் ஒரு வருட அனுபவமும் கட்டாயம்.
வயது வரம்பு:
* வயது வரம்பு 20.04.2026 நிலவரப்படி கணக்கிடப்படும். கான்ஸ்டபிள் (கால்நடை), கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) மற்றும் கான்ஸ்டபிள் (நர்சிங் உதவியாளர்) ஆகிய பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் (தச்சர்) பணிக்கு 18 முதல் 25 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* கான்ஸ்டபிள் (தோட்டக்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர், தையல்காரர்) பணிகளுக்கு 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பட்டியல் ஜாதி/பழங்குடியினருக்கு (SC/ST) வயது வரம்பில் 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கான்ஸ்டபிள்களுக்கு, நிலை - 3 ஊதிய விகிதத்தின்படி, மாதம் ரூ. 21,700/- முதல் ரூ. 69,100/- வரை ஊதியம் வழங்கப்படும். அனைத்து கான்ஸ்டபிள் பணிகளுக்கும் ஒரே அளவிலான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு (PET), உடல் தரத் தேர்வு (PST), கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (DME) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், மறு ஆய்வு மருத்துவ பரிசோதனை (RME) நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். பெண்கள், பட்டியல் ஜாதி (SC), பழங்குடியின (ST) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், SSB-யின் https://ssb.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'Careers' பகுதிக்குச் சென்று, முழுமையான அறிவிப்பை கவனமாகப் படித்தபின் 21.03.2026 முதல் 20.04.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications