சப்-இன்ஸ்பெக்டர் வேலை.. 1876 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
சென்னை: எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் டெல்லி காவல் படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை என மொத்தம் 1876 சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission) டெல்லி காவல் படை மற்றும் மத்திய பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்;

பணியிடங்கள் விவரம்:
டெல்லி காவல்துறையில் எஸ்.ஐ Sub-Inspector (Exe.) ஆண்கள்: 109 பணியிடங்கள்
டெல்லி காவல்துறையில் எஸ்.ஐ Sub-Inspector (Exe.) பெண்கள்: 53 பணியிடங்கள்
மத்திய பாதுகாப்பு படையில் எஸ். ஐ Sub-Inspector (GD): 1714 பணியிடங்கள்
என மொத்தம் 1876 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி என்ன?: டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு (PET) தேர்வு நடைபெறும்.
உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் 170 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் 165 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி தளர்வுகளும் உண்டு. இந்த விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2023 தேதியின் படி 20 வயதுக்கு குறையாமலும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். துறையில் ஏற்கனவே பணியாற்றுபவர்கள் அதாவது கான்ஸ்டபிள் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு நடைபெறும் இடங்கள்: இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.08.2023 ஆம் தேதி ஆகும். தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications