எஸ்.ஐ. வேலை.. மத்திய அரசு பணி.. மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. அருமையான வாய்ப்பு.. விட்றாதீங்க
சென்னை: டெல்லி போலீஸ், மத்திய ஆயுத படையில் காலியாக உள்ள 4,187 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை பணியிடங்களை நிரப்பும் பணியை எஸ்.எஸ்.சியே மெற்கொள்கிறது.

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்புகளை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத படையில் 4,187 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: டெல்லி காவல்துறையில் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 125 ஆண் போலீஸ் மற்றும் 61 பெண் போலீஸ் என மொத்தம் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய ஆயுதப்படை CAPFs-ல் 4001 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 4,187 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.08.1999 முன்பாக பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
* CAPFs -சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ..35,400-.1,12,400/ வரை சம்பளமாக கிடைக்கும்.
* டெல்லி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.35,400 - 1,12,400-வரை சம்பளமாக கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 28.03.2024 கடைசி நாளாகும்.
தேர்வு முறை: ஆன்லைன் வழி தேர்வு முறை, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் நடைபெறுகிறது. கணிணி வழி தேர்வு மே 9, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/final%20notice%20cpo%202024%2004.03.2024.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications