சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர ஆசையா? மத்திய அரசு அழைப்பு.. லட்சத்தில் சம்பளம்.. சூப்பர் வாய்ப்பு
டெல்லி: டெல்லி காவல் துறை, மத்திய ஆயுத காவல்படை ஆகியவற்றில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சி.ஏ.பி.எஃப். என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய ஆயுத காவல் படை இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்பு ஆகும். இந்த படை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறது. மத்திய ஆயுத காவல் படை 7 வகையான படைப் பிரிவுகளைக் கொண்ட அமைப்பாக உள்ளது. அதாவது மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), இந்தோ- திபெத்தியன் எல்லை படை (ஐடிபிபி), தேசிய பாதுகாப்பு காவல் (என்எஸ்ஜி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைஃபிள்ஸ் ஆகிய படைகளாக செயல்படுகிறது.

இதேபோல் டெல்லி காவல்துறை என்பது டெல்லி மாநகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அமைப்பு ஆகும். டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில் டெல்லி காவல் துறை, மத்திய ஆயுத காவல்படை ஆகியவற்றில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்தியப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
பணி விவரங்கள், காலிப் பணியிடங்களின் உத்தேச எண்ணிக்கை, வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், அதைச் செலுத்தும் முறை, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை தேர்வாணையத்தின் https://ssc.gov.in. என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற மார்ச் 28-ந் தேதி ஆகும். தென்மண்டலத்தில், கணினி அடிப்படையிலானத் தேர்வு மே 9, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். தமிழ்நாட்டில் 7 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது" இந்த தகவலை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியாளர் வகை பணியான டெல்லி காவல் துறை, மத்திய ஆயுத காவல்படை ஆகியவற்றில் 4187 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவற்றில் பணியில் அமர்த்தப்படுவார்கள்..
பணி வாரியாக காலி பணியிடங்கள் : மத்திய ஆயுத காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்: 4001 காலியிடங்கள் (ஆண்-3693, பெண்-308)
சம்பளத்தை பொறுத்தவரை குரூப்-பி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி6 ₹35400-112400/- ஆக சம்பளம் இருக்கும் வயது: 01/08/2024 அன்று 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய ஆயுத காவல்படையில் படை வாரியாக எஸ்ஐ பணியிடங்கள்
BSF - 892 (ஆண்-847, பெண்-45)
CISF - 1597 (ஆண்-1437 , பெண்-160)
CRPF - 1172 (ஆண்-1113, பெண்-59)
ITBP - 278 (ஆண்-237, பெண்-41)
SSB - 62 (ஆண்-59, பெண்-03)
டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்: 186 காலியிடங்கள் (ஆண்-125, பெண்-61), ஊதிய அளவில் குரூப்-சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி ₹35400-112400/- ஆக உள்ளது, வயது: 01/08/2024 அன்று 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications