பாரதிராஜா மலேசியாவுக்கு போக காரணமே இதுதான்! கடைசி ஆசை நடக்கல! சொத்து பிரச்சனை! கண்கலங்க பேசிய தம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜா மறைந்து பல நாட்கள் கடந்துவிட்டாலும், அவருடைய குடும்பத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் மட்டும் இன்னும் அடங்கிய பாடில்லை. குறிப்பாக அவரது இறுதிச்சடங்கின் போது மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதன்பிறகு பாரதிராஜாவின் சொத்துக்கள், மலேசியா பயணம், குடும்ப சண்டை என பல்வேறு யூகங்கள் இணையத்தில் பரவி வந்தன.

இந்த சூழ்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் தற்போது மனம் திறந்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Bharathiraja Jayaraj TamilCinema

பாரதிராஜாவின் வருத்தம்

ஜெயராஜ் கூறுகையில், பாரதிராஜாவின் கடைசி நாட்கள் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை பகிர்ந்துள்ளார்.

"அண்ணன் பாரதிராஜா வெளியில் தைரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் மனோஜின் இழப்பால் ரொம்ப உடைந்து போயிருந்தார். சில நேரங்களில் சாதாரணமாக பேசுவார். ஆனால் தனியாக இருக்கும்போது மனோஜை நினைத்து வருத்தப்படுவார். ஏற்கனவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருக்கும்போதே மனோஜ் உயிரிழந்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.

மகனை இழந்த தந்தையின் வலி வெளியில் தெரியாமல் இருந்தாலும், அந்த வேதனை பாரதிராஜாவை நாளுக்கு நாள் பலவீனப்படுத்தியதாக குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

மலேசியா சென்றது

பாரதிராஜா மலேசியா சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கதைகள் பரவி வந்தன. குறிப்பாக, "ஜனனி அவரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார்" என்ற குற்றச்சாட்டுகள் சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதள பதிவுகளிலும் பரவின.

இதற்கு பதிலளித்த ஜெயராஜ், "அண்ணன் மலேசியா போனது மனநிம்மதிக்காக. மனோஜ் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட மனஅழுத்தத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பத்தினர் அவரை அங்கு அழைத்துச் சென்றார்கள். அவர் பழையபடி திரும்பி வருவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதை கூட சிலர் சொத்து கதையாக்கி பேசுவது வேதனை அளிக்கிறது" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடைசி ஆசை

பாரதிராஜாவுக்கு தனது சொந்த ஊரான தேனி மீது இருந்த பாசம் பற்றி பலரும் அறிந்ததே. அந்த பாசம் இறுதி நாட்களிலும் குறையவில்லை என்கிறார் ஜெயராஜ்.

"அண்ணன் அடிக்கடி தேனிக்கு போகணும், நம்ம ஊர்ல இருக்கணும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அங்கு அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடையாது. போக்குவரத்து வசதியும் சிரமம். அதனால் நாங்கள் சென்னையிலேயே வைத்திருந்து சிகிச்சை பார்த்தோம். கொஞ்சம் உடல்நிலை சரியானதும் தேனிக்கு அனுப்பலாம் என்று நினைத்தோம். ஆனால் அதற்குள் கடவுள் அவரை எங்களிடம் இருந்து பிரித்துக்கொண்டார்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மனசு உடைந்து போகுது

அண்ணனை நினைத்து பேசும் போது ஜெயராஜின் குரலே தழுதழுத்து இருந்தது.

"ஒவ்வொரு நாளும் மாலை நேரம் வந்தாலே பழைய நினைவுகள் எல்லாம் வந்து மனசை பிசைந்து விடுகிறது. அண்ணன் இல்லாததை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் எங்கள் குடும்பத்திற்கு மட்டும் இவ்வளவு சோதனை வருகிறது என்று பல நேரங்களில் தோன்றுகிறது" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சொத்து சர்ச்சைக்கு மீண்டும் விளக்கம்

சமீப நாட்களாக பாரதிராஜாவின் சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. "ஆயிரம் கோடி சொத்து", "ஜனனி அபகரித்தார்", "மருமகள் விரட்டப்பட்டார்" போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

ஆனால் இதற்கு முன்பே ஜெயராஜ் விளக்கம் அளித்திருந்தார். "சொத்து பிரச்சனை எதுவும் இல்லை. அண்ணன் உயிரோட இருக்கும்போதே எல்லாவற்றையும் முறையாக பிரித்து எழுதி வைத்துவிட்டார். மகளுக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, மருமகளுக்கு ஒரு பங்கு என தெளிவாக முடிவு செய்து விட்டார். இப்போது சமூக வலைதளங்களில் பேசப்படுவது போல எந்த பெரிய சொத்து சண்டையும் இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

சர்ச்சையாக்கும் இணையம்

பாரதிராஜா தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு சினிமா மொழியை கற்றுக்கொடுத்த பள்ளிக்கூடம். அப்படிப்பட்ட ஒருவரின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பம் அமைதியாக துயரம் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மகன் மனோஜின் மறைவு, அதிலிருந்து மீள முடியாத தந்தையின் மனவேதனை, உடல்நலப் போராட்டம், இறுதியில் பாரதிராஜாவின் மறைவு என தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் அந்த குடும்பம் ஏற்கனவே உடைந்த நிலையில் இருந்ததாக நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், "மலேசியா பயணம்", "சொத்து பிரச்சனை", "குடும்ப மோதல்" போன்ற வதந்திகள் தொடர்ந்து பரவுவது குடும்பத்தினரை மேலும் வேதனைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் தற்போது ஜெயராஜ் நேரடியாக பேசி, "உண்மையை விட கற்பனைகள்தான் அதிகமாக பரவி வருகின்றன" என்று வருத்தம் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+