SSC job: வந்தாச்சு அறிவிப்பு! மத்திய அரசு வேலை.. 2,423 பணியிடங்கள்.. 10 டூ டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்
சென்னை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 2,423 பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் கால அவகாசம் தொடங்கியுள்ளது. கல்வித்தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சியால் நிரப்பப்படுகிறது. எஸ்.எஸ்.சி நடத்தும் இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு எப்படியாவது தேர்ச்சி பெற்று மத்திய அரசு பணிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்பது போட்டித்தேர்வர்களுக்கு தயாராகும் மாணவர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது.

பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவை கிடைக்கும் என்பதால் மத்திய அரசு பணிகளில் சேருவது என்பது பலருடைய கனவாகும். இதனால் எஸ்.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் 2,423 பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
கேண்டீன் அட்டெண்டெண்ட், ஜூனியர் என் சீனியர், டெக்னிக்கல் சுப்பரெண்ட், டெக்னிக்கல் அட்டெண்டெண்ட், சயிண்டிபிக் அசிஸ்டண்ட், சீனியர் சயிண்டிபிக் அசிஸ்டண்ட், பையர்மேன், டிரைவர், ஆபிஸ் அசிஸ்டன்ட் என பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 2,423 பணியிடங்கள் நிரப்பப்படுகிற்து.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை பதவிக்கு ஏற்ப மாறுபடும். 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள், 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். தேர்வு அறிவிப்பினை படித்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்கள் முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். எனினும் ஒருசில பதவிகளுக்கு 18 முதல் 30 வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடும்.
வயது வரம்பு தளர்வை பொறுத்தவரை,SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள், PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 02.06.2025 ஆகும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 23.06.2025. தேர்வை பொறுத்தவர ஆகஸ்டு மாதம் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Staff Selection Commission-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://ssc.gov.in/) சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவு 02.06.2025 அன்று நள்ளிரவு 12:01 மணிக்குத் தொடங்கி 23.06.2025 அன்று இரவு 11:00 மணிக்கு முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி & வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ள இந்த லிங்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2025_phase_xiii.pdf கிளிக் செய்யவும்.
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications