மாதம் 35 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசு வேலை.. 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. கை நிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு என மத்திய அரசு பணிகளில் பல சலுகைகளை இருப்பதால் எப்படியாவது மத்திய அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலம்.
பணியிடங்கள் விவரம்:
261 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்: சி & டி கிரேடு: இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.08.2025 தேதிப்படி, கிரேடு சி பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஆகஸ்ட் 2, 1995 முதல் ஆகஸ்ட் 1, 2007க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு 27 ஆகும். 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் , 2007 ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இதன்படி பார்த்தால், 30 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கிரேடு சி பணியிடத்திற்கு எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பின் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 06.6.2025 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் 26.06.2025 கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 1.07.2025 முதல் 02.05.2025 வரை வரை அவகாசம் அளிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாள்: 6 ஆகஸ்ட் 2025 முதல் 11 ஆகஸ்ட் 2025க்குள் ஆகும்.
தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_steno_2025.pdf.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications