போலீஸ் வேலைதான் கனவா! 39,481 பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. தேதி முடிய போகுது! எஸ்எஸ்சி அறிவிப்பு
சென்னை: மத்திய காவல் படைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே இருக்கின்றன. இதனால், ஆர்வமும் தகுதியும் இருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காத்திருக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பனியிடங்களை மத்திய அரசுபணியாளர் தேர்வு ஆணையமான (எஸ்.எஸ்.சி) ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலமாக நிரப்பி வருகிறது. மத்திய அரசு பணி என்பதால் கைநிறைய சம்பளத்துடன் சலுககளும் கிடைக்கும். இதனால் அரசு பணிகளுக்காக தயாராகி வரும் தேர்வர்கள் இந்த தேர்வு அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான், 39,481 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். விண்ணபிப்பது எப்படி, பணியிடங்கள் எத்தனை என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: மத்திய பாதுகாப்பு படையில் காவலர் ( GD-பொது பணி) 39,481 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், என்சிபி உள்ளிட்ட படைபிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியிடங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் தேவைபடும் இடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 23-வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜனவரி மாதம் 2 ஆம் தேதி 2002 க்கு முன்பு பிறந்தவர்களும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. மத்திய அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 28 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 26 வயது வரையும் சலுகை உண்டு.
சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் தன்மைக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும். சிப்பாய் பணிக்கு மாதம் ரூ. 18,000 முதல் 56,900 வரையும் இதர காவலர் பணிக்கு ரூ21,700- 69,100 வரையும் வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் டெஸ்ட், சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழி தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர், நெல்லை உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும். தேர்வு மையத்தை தேர்வர்கள் செலக்ட் செய்யும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். தேர்வர்கள் கொடுத்துள விருப்ப தேர்வு மையங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்வு மையம் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும் உடல் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 14.10.2024. கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்க இன்றுடன் சேர்த்து வெறும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து விடவும்.
தேர்வு எப்போது?: விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வை பொறுத்தவரை ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இது குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு பிறகு அறிவிக்கப்படும்.தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf இந்த லிங்க கிளிக் செய்யவும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications