தமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர் வேலைதான் கனவா? வந்தது அறிவிப்பு.. ரெடியா இருங்க.. TNUSRB முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகிக் கொண்டு இருக்கும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் பல இளைஞர்களுக்குக்கும் இருக்கும். அந்த காக்கி உடையின் கம்பீரம் மீது உள்ள ஆசையில் அதற்காக தவம் இருப்பவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். காவலராக பணியில் சேர்ந்து அதன்பின்னர் உயர் தேர்வுகள் எழுதி பெரிய உயர் அதிகாரியாகவும் மாற முடியும்.

பணி பாதுகாப்பு, சமூகத்தில் மதிப்பு மரியாதையோடு மக்களுக்கு சேவை என பணியில் திருப்தி இருக்கும் என்பதால் போலீஸ் வேலை என்பது பெரும் கனவாக பலருக்கும் உள்ளது. கல்லூரி படிக்கும் போதே சில மாணவ மாணவிகள் காவலர் தேர்வை மனதில் வைத்து உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
அறிவிப்பு எப்போது?: காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் பல இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் எப்போது அறிவிப்பு வெளியிடும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதையும் காண முடியும். வழக்கமாக தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஆண்டு 3,359 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதேபோல் எஸ்.ஐ பணியிடத்திற்கான அறிவிப்பு மே மாதம் வெளியானது. மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த முறை வெளியானது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எஸ்.ஐ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் உள்ளது.
தேர்வு அறிவிப்பு வரும் முன்பே அதை எதிர்பார்த்து படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலரும் எத்தனை பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும்... எப்போது வெளியிடப்படும் என்ற ஆர்வத்துடன் இருப்பதை காண முடிகிறது. இந்த சூழலில்தான், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான நோட்டிபிகேஷன் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்றால் ஜூலை அல்லது ஆகஸ்டில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
தேர்வு முறை: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று வகையான கட்டங்களை கடந்த பின்னர் தகுதியான தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வும் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் தமிழ் தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தது 32 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு (45 வினாக்கள்) மற்றும் உளவியல் (25) சார்ந்த வினாக்கள் இடம் பெற்று இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெறும். உடல் தகுதி 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
கடந்த காலங்களில் எஸ்.ஐ தேர்வுக்கு இந்த முறையே பின்பற்றப்பட்டது. எனினும் தேர்வு அறிவிப்புக்கு பிறகே எத்தனை காலிப்பணியிடங்கள், தேர்வு எப்போது, தேர்வுமுறை உள்ளிட்டவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிய வரும். ஜூன் மாதத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் எஸ். ஐ தேர்வுக்காக படித்து கொண்டு இருப்பவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications