ஈஸியா கிடைக்கும் அரசு வேலை.. வரும் 17, 18ல் சுருக்கெழுத்தர் தேர்வு.. ஹால் டிக்கெட் எப்போன்னு பாருங்க
நவம்பர் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது.. இதற்கான ஹால் டிக்கெட் எப்போது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது..
எவ்வளவுதான் அறிவியல், கல்வியறிவு பெருகினாலும், நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.. அதேசமயம், தமிழ்நாட்டில் பெரும் படிப்பு படித்த இளைஞர்கள் மத்தியிலும் அரசுப் பணிகளுக்கு என்று தனியிடம் இருக்கத்தான் செய்கிறது.

GROUP 4
எனவேதான், 10ம் வகுப்பு கல்வி தகுதி போதுமானதாக கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு முதுநிலை, இளநிலை மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்து, அதில் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.. பொதுவாக, குரூப் 4 வினாத்தாள் சற்று எளிதாக இருந்தாலும், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே இந்த தேர்வின் தன்மை கடினமாகிவிடுகிறது... விடாமுயற்சி என்பதையும் தாண்டி, அரசு தட்டச்சுத் தேர்வு மற்றும் கணினிதிறன் தேர்வு போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இன்று எழுந்துள்ளது.

டைப்ரைட்டிங்
மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசுகளானாலும் சரி, சுப்ரீம்கோர்ட் என்றாலும் சரி, மாவட்ட நீதிமன்றங்களானாலும் சரி, தட்டச்சர், சுருக்கெழுத்தர் இல்லாமல் இயங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.. மேலும், எஸ்எஸ்சி தேர்வாணையம் வெளியீடும் பெரும்பாலான காலிப் பணியிடங்களுக்கு தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற தகுதிகள் மிக முக்கியமானதாகும்.. அந்தவகையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது..

ஷார்ட் ஹேண்ட்
இதற்கான ஹால் டிக்கெட் எப்போது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் நாகராஜா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், சுருக்கெழுத்தாளர் "சி' ,'டி' நிலை பணிக்கு தேர்வு, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ளது.. தென் மண்டலத்தில் 35 ஆயிரத்து 557 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது..

ஹால் டிக்கெட்
தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், தேர்வு எழுதுவோர், பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும், தங்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துவரக்கூடாது, அந்த பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களை, 044 - 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற மொபைல் போன் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications