உச்ச நீதிமன்றத்தில் வேலை! மாதம் ரூ.46 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.46,210 வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்புகளில் ஒன்று உச்ச நீதிமன்றம். தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் அலுவல் பணிகள் உள்பட பல்வேறு வேலைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய பணியிடங்களில் காலியாகும் போது, உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறும்.

அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம் & கல்வி தகுதி: ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் (சமையல் தெரிந்து இருக்க வேண்டும்) - 80 பணியிடங்கள். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது சமையல் பிரிவு துறையில் டிப்ளமோ படித்து இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு & சம்பளம்: இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுக்ள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஒபிசி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.46,210 வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, செய்முறை திறன் தேர்வு (சமையல்) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கட்டணத்தை பொறுத்தவரை ரூ 400 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ.200 கட்டணம் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://www.sci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 23.08.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.09.2024 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை
https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/08/2024081713.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications