உச்ச நீதிமன்றத்தில் வேலை.. ரூ.74,000 சம்பளம்! டிகிரி முடித்திருந்தால் போதும்.. தேதி முடிய போகுது
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
இந்தியாவின் உயரிய நீதித்துறை அமைப்பாக உச்ச நீதிமன்றம் உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் அலுவல் பணிகளிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கை நிறைய சம்பளம், சலுகை உள்ளிட்டவை கிடைப்பதால் உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது காலியாக உள்ள 278 கோர்ட்டு அஸ்சிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்ப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சில நாட்களே அவகாசம் உள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் (Group 'B' Non-Gazetted) பணிக்கு மொத்தம் 241 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். கணினி பற்றிய அடிப்படைகள் தெரிந்து இருக்க வேண்டும். இதேபோன்று நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால், 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றா 10 ஆண்டுகளும், எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.74 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு வைக்கப்படும். இதன் பின்னர் டைப்பிங் டெஸ்ட் மற்றும் கணினி இயக்கும் திறன் டெஸ்ட் வைக்கப்படும். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தினை எடுத்துக்கொண்டால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தேர்வு நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.sci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ் சி எஸ்டி பிரிவினர் என்றால், ரூ. 250 விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 8 ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதற்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக்
https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/02/2025020434.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications