டிகிரி போதும்.. தமிழக வனத்துறையில் டேட்டா என்ட்ரி, டெக்னீக்கல் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு.. ரெடியா?
தர்மபுரி: தமிழ்நாடு வனத்துறையில் தர்மபுரி வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளின்படி அவ்வப்போது நிரப்பப்பட்ட வருகிறது. இந்நிலையில் தான் தர்மபுரி வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர், தரவு நுழைவு இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னீக்கல் அசிஸ்டென்ட்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சர் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட களநிலை ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேல்உரிய அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தரவு நுழைவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம்/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் பட்டம்/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛மாவட்ட வனஅலுவலர், தருமபுரி வனக்கோட்டம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தருமபுரி - 636 705, தொலைபேசி எண். 04342 - 230003 என்ற முகவரிக்கு ஜூன் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். மாத சம்பளம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பனும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசு மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications