சவுதி அரேபியாவில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.. மிகப்பெரிய ஜாக்பாட் வாய்ப்பு
சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வேலை காத்துக்கொண்டிருக்கிறது.. நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த அனுப்புகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பல பெண்கள் டாக்டர் படிப்பு கிடைக்காத பட்சத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதை அதிகம் விரும்புகிறார்கள். மிக அதிகமானோர் பிஎஸ்சி நர்சிங் படிக்க அங்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.. காரணம் அந்த படிப்பிற்கு வெளிநாடுகளில் உள்ள கிராக்கி தான் காரணம். 3 வருடம் நர்சிங் முடிந்து, உள்ளூரில் உள்ள ஓரளவு நல்ல மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டு வரை பயிற்சியுடன் கூடிய அனுபவம் பெறும் அவர்கள், அதன்பிறகு வளைகுடா நாடுகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணிப்பிக்கிறார்கள்.

அங்கு வேலை கிடைத்த உடன் உடனடியாக அங்கு வேலையில் சேருகிறார்கள். அங்கு நல்ல சம்பளம் மற்றும் பணி அனுபவம் பெறும் அவர்கள்.. அஙகு குறைந்தது 4 அல்லது ஐந்து ஆண்டுகள் வேலை செய்து செட்டில் ஆகிறார்கள். அதன்பிறகு அந்த அனுபவத்தை வைத்து ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பித்த பலருக்கு வேலையும் கிடைக்கிறது..
அப்படி வேலை கிடைத்த பின், சில ஆண்டுகளில் குடியுரிமை வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். நல்ல சம்பளம், நிரந்தரமான வேலை.. அருமையான வாழ்க்கை சூழல் என எல்லாமே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால், வறுமையில் இருந்து பலர் மீண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை கிடைத்தால் நர்சிங் வாய்ப்பை விட்டுவிட வேண்டாம். எனினும் அரசே ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் மூலமாக மட்டுமே செல்வது பணிக்கு உத்தரவாதமாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்www.omcmanpower.tn.gov.inஎன்ற வலைதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 2-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications