மகளிர் உரிமை தொகை + 2 புது திட்டம்.. அடுத்த 10 நாட்களில் தமிழக அரசு தரும் ரூ.3000.. யாருக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மே மாதத்திற்கான உதவித்தொகை அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை மற்றும் மற்ற 2 முக்கியமான திட்டங்களுக்கான தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். மே மாதத்திற்கான தொகை அடுத்த வாரத்தில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

Tamil Nadu govt

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் வரையிலான தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. மே மாதத்திற்கான தொகை அடுத்த 10-15 நாட்களில் வழங்கப்படும்.

சுமார் 4 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோரும் புதிதாக திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் மற்ற இரண்டு திட்டங்களின் கீழ் ரூ.2000 பல்வேரு பயனாளிகளுக்கு வழங்கப்டும்.

புதுமைப்பெண் - மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் இளங்கலை படிப்பு படிக்கும் வரை இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாணவிகள் எங்கும் அலைய வேண்டியதில்லை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

அதேபோல், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் புதல்வன் திட்டம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி புரிகிறது.

புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை அடுத்த வாரம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.

மகளிர் உரிமை தொகை பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால்.. மற்ற 2 திட்டத்திற்கான தொகை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+