அட சூப்பர்.. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,699 உதவி பேராசிரியர்கள் நியமனம்.. வெளியானது அரசாணை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ம் ஆண்டில் 5,699 உதவி பேராசியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு உயரகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என பல்வேறு பொறுப்புகளில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் நிரந்தரமாகவும், இன்னொரு தரப்பினர் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் உயர்கல்வித்துறை சார்பில் தற்போது அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. வழக்கம்போல் இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. தற்போது அரசு கலை மற்றும் அரசு கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் ஏராளமாக உள்ளன.
இதற்கு உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்வது என்பது தொடர்ந்து தாமதப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி கற்றலில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் விபரம் வருமாறு: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் 5699 பேரை 2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உதவி பேராசியர்களாக பணியமர்த்தப்படும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2023-24 கல்வியாண்டிற்கு ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நியமனம் என்பது யூஜிசி எனும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யப்படுவோர் 11 மாதங்கள் வரை பணியாற்ற உள்ளனர். இவ்வாறு நியமனம் செய்யப்படுவோர் பாதியில் பணியை கைவிட்டாலோ அல்லது பிற காரணங்களால் காலிப்பணியிடம் ஏற்பட்டால் அதனை அரசின் அனுமதி பெற்ற பிறகு நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம்












Click it and Unblock the Notifications