ரூ.1.13 லட்சம் வரை சம்பளம்! தமிழ் தெரிந்தால் போதும்.. கோவையில் அறநிலையத்துறையில் அசத்தலான வேலை!
கோவை: கோவையில் உள்ள மாசானியம்மன் கோவிலில் காலியாக இளம் உதவியாளர் உள்பட 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் டிப்ளமோ முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு ஏதுமின்றி நேர்க்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் அதிகபட்சமாக ரூ.1.13 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் கோவை மாவட்டம் ஆனைமலை நகரில் உள்ள மாசானியம்மன் கோவிலில் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: மாசானியம்மன் கோவிலில் ஜூனியர் என்ஜினியர், பிளம்பர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர், இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு தலா 2 பேர், பாதுகாவலர் பணிக்கு 3 பேர், கிளீனர் (Cleaner) பணிக்கு 10 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பது 2023 ஜூலை 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி: ஜூனியர் என்ஜினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ சிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளம்பர் பணிக்கு அதற்கான ஐடிஐ படிப்பு அல்லது அந்த பணியில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பாதுகாவலர், கிளீனர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ஜூனியர் என்ஜினியர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,900 முதல் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும். இளம் உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும், பிளம்பர் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், பாதுகாவலர் பணிக்கு ரூ.15,900 முத்ல ரூ.50,400 வரையும் சம்பளம் வழங்கப்படும். மேலும் கிளீனர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரையும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.15 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பணி நாட்களில் கோவில் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்ப முகவரி: அதன்பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் மாதம் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ‛உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆனைமலை'' என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கோவில் அலுவலகத்துக்கு சென்று கேட்டு தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications