டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. TCS தரும் சூப்பர் வேலை.. அக்., 19 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸில் இருந்து ஒரு பக்கம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் மறுபுறம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில Arts and Commerce-ல் ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி படிப்பை முடித்தவர்களும், இறுதியாண்டு படிப்பை படிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி அக்டோபர் 19 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஐடி துறையில் அதிகம் உச்சரிக்கப்படும் நிறுவனம் டிசிஎஸ் ஆகும். முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) நிறுவனம் டாடா குழுமத்தை சேர்ந்தது.

tcs-bps-hiring-batch-of-2026-role-and-application-date-extended-up-to-october-19

இந்த நிறுவனத்தில் இருந்து 12,000 பேர் வரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பல நிறுனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு புறம் டிசிஎஸ் நிறுவனம் சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் TCS BPS Hiring - Batch of 2026 என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு Arts and Commerce பிரிவில் கல்லூரி படிப்பை 2026ல் முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது தற்போது இறுதியாண்டு படித்து வருவோர் விண்ணப்பிக்கலாம். பிகாம், பிஏ, பிஎஎஃப், பிபிஐ, பிபிஏ, பிபிஎம், பிஎம்எஸ் படிப்புகளை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.3 ஆண்டு முறைப்படி கல்லூரி சென்று படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். Part time மற்றும் Distance Education முறையில் படித்தவர்களுக்கு அனுமதியில்லை.

விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை பணிக்கு சேருவதற்கு முன்போ அல்லது கல்லூரி படிப்பை முடிக்கும் முன்போ கிளியர் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்ய அக்டோபர் 12ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தேதி அக்டோபர் 19 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துக்கான தேதி முடிய இன்னும் 2 நாட்களே மட்டுமே உள்ளன. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் TCS NextStepPortal சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்யும்போது ஆதார் கார்டில் இருப்பது போல் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். பிழையின்றி சுயவிவரங்களை பதிவிட வேண்டும். பிழை எதுவும் இருப்பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்கள் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும்போது தேர்வு மையத்தை செலக்ட் செய்ய வேண்டும். தேர்வு மையத்தை பொறுத்தவரை First Come First Serve முறை பின்பற்றப்பட உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் தான் அருகே உள்ள தேர்வு மையத்தை ‛செலக்ட்' செய்யலாம். தேர்வு என்பது மொத்தம் 50 நிமிடங்கள் வரை இருக்கும். Numerical, Reasoning, Quantitative aptitude வகையில் இருக்கும்.

அதோடு விண்ணப்பதாரர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் இதுவரை நடந்த செமஸ்டர் தேர்வுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான அப்டேட்டுகள் ‛TCS iON - Our Test Provider' மூலம் வழங்கப்படும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு தேதி பிறகு அறிவிக்கப்படும்.

மேலும் விண்ணப்பம் மற்றும் பணி நியமனத்துக்கு பணம் எதுவும் கேட்கப்படாது. இதனால் விண்ணப்பத்தாரர்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] என்ற இணையதளம் அல்லது 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 24X7 என்ற முறையில் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+